“ஸ்ரீலங்கா அரசு தமிழ் மக்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். இங்கு கனடாவில் பல்லின மக்களும் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் வாழுகின்றோம். அதே நிலை ஸ்ரீலங்காவிலும் ஏற்பட வேண்டும். தமிழர்களுக்கு என் இதயத்தில் தனியான இடமுண்டு.அதனால் தான் இன்று எமது புதுவருடத் தினமாக இருந்த போதிலும் தமிழ் மலரான “தளிர்” வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளேன். திரு.சிவமோகனால் வெளியிடப்படும் இந்த “தளிர்” சஞ்சிகையிலுள்ள விடயங்கள் யாவும் சரித்திரமாக மாற வேண்டும்”
கனடாவிலிருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான தளிரின் இரண்டாவது இதழ் இவ்வாண்டின் முதலாவது இதழாக வெளிவந்துள்ளது. அந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதி மாநகர சபை உறுப்பினர் திரு.றேமன் சோ சபையோரின் கரகோஷத்துக்கு மத்தியில் இவ்வாறு கூறினார்.
கனடாவிலிருந்து வெளிவரும் காலாண்டு சஞ்சிகையான தளிரின் இரண்டாவது இதழ் இவ்வாண்டின் முதலாவது இதழாக வெளிவந்துள்ளது. அந்த வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபுறோ றூஜ் றிவர் தொகுதி மாநகர சபை உறுப்பினர் திரு.றேமன் சோ சபையோரின் கரகோஷத்துக்கு மத்தியில் இவ்வாறு கூறினார்.
ஸ்காபுறோ மெக்னிக்கல் வீதியிலுள்ள தேவாலய மண்டபத்தில் (31.01.2014) வெள்ளி மாலை நடைபெற்ற
இவ்வைபவத்திற்கு தலைமை தாங்கிய கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் தனது தலைமையுரையில் பின்வருமாறு கூறினார்:
இவ்வைபவத்திற்கு தலைமை தாங்கிய கலாநிதி பாலசுந்தரம் அவர்கள் தனது தலைமையுரையில் பின்வருமாறு கூறினார்:
“இம்மண்டபத்திலே சிறப்பு வாய்ந்த எழுத்தாளர்கள் பலர் கூடி இருப்பதைக் காண மிக்க மகிழ்ச்சியாக இருக்கின்றது. திரு.சாமி அப்பாத்துரை, சிந்தனைப் பூக்கள் பத்மநாதன், திரு.ராஜபாலன், டாக்டர் போள் ஜோசெப், கலாநிதி உதயகரன், திரு.சந்திரசேகரன், வீரகேசரி மூர்த்தி, புதுவை ராமன் போன்றோர் தளிர் ஆசிரியர் திரு.சிவமோகனுக்கு பக்கபலமாக உள்ளார்கள்.
தமிழனத்தின் ஆரம்ப கால நிகழ்வுகளை பண்டைய வரலாற்று ஆசிரியர்கள்,அறிஞர்கள்,புலவர்கள் ஆகியோர் ஆவணமாக்கி வைத்ததினால் எமது பண்டைய வரலாற்றினை இன்று நாமனைவரும் அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. அதே போன்று இன்றைய காலகட்ட நிகழ்வுகளையும் நாம் ஆவணமாக்க வேண்டும். அதற்கு “தளிர்” போன்ற சஞ்சிகைள் களம் அமைத்துக் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு எமது பண்டைய வரலாற்றினை சொல்லிக் கொடுக்க வேண்டும்”.
வரவேற்புரை வழங்கிய திரு.சாமி அப்பாத்துரை அவர்கள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் திரு.சிவமோகன் தளிர் சஞ்சிகையினை ஆர்வத்துடன் வெளியிட்டு வருவது பாராட்டுதற்கரிய செயலாகும். தமிழையும், தமிழ் பண்பாட்டினையும் வளர்ப்பதோடு மாத்திரமல்ல தமிழ் கலை கலாச்சாரங்களையும் வளர்க்கும் வகையில் அண்மையில் அழகு ராணி போட்டியில் முதலி டம் பெற்ற செல்வி யதுரி சிவானந்தத்தின் புகைப் படத்தினை முன் அட்டையில் பிரசுரித்திருப்பது வர வேற்கத்தக்க விடையமாகும்” என்றார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஸ்காபுறோ எம்.பி.திரு.ஜிம் காரியானிஸ் உரையாற்றிய போது “கனடாவில் தமிழ் மக்கள் தமது பாரம்பரிய தினமான தைப் பொங்கல் தினத்தை கொண்டாடி வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கடந்த இருபத்தைந்து வருட காலமாக ஸ்ரீலங்காவில் வாழும் தமிழ் மக் கள் இனஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளாகி பெரும் வேதனைகளை அனுபவித்துள்ளனர்.
கனடா அரசு பல்கலாச்சாரத்துக்கு மதிப்பளித்து வருகின்றது. ஆனால் கடந்த ஏழாண்டு காலமாக பல தமிழ் குடும்பங்கள் கனடா வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நடவடிக்கைகளை துரிதப் படுத்துவதில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்” என்றார். அத்துடன் தளிர் ஆசிரியர் சிவமோகனுக்கு பாராட்டு பத்திரம் ஒன்றினையும் வழங்கி கௌரவித்தார்.
டாக்டர் போள் தளிர் சஞ்சிகையின் சிறப்பினை கவிதை மூலம் வெளிப்படுத்தினார். அவரது கவிதைக ளில் உள்ளத்தைக் கவர்ந்த சில வரிகள் “இன்றைய தளிர் நாளைய மரம், மரங்களடமிருந்து மனிதத் தை கற்றுக் கொள்ளும் அளவுக்கு, மனிதனிடம் மனிதம் மரத்துப் போயுள்ளது. பூஜ்யத்திற்;கு கீழே பூமி யின் குளிர் தாங்கி, மிடுக்காய் மீண்டும் துளிர்த்து தளிராகி உயிர் பெற்றிடும் இந்த கனடா மரங்கள்- நமது நம்பிக்கையின் சின்னங்கள்…”
கலாநிதி உதயகரன் உரையாற்றிய போது “விதை ஒன்று வெடித்து முளையாகி மரமாக வளர்கிறது. “தளிர்” என்ற இந்த மலர் கிளைகள் விட்டு விருட்சமாக வளர வாழ்த்துகின்றேன்”.
கலாநிதி உதயகரன் உரையாற்றிய போது “விதை ஒன்று வெடித்து முளையாகி மரமாக வளர்கிறது. “தளிர்” என்ற இந்த மலர் கிளைகள் விட்டு விருட்சமாக வளர வாழ்த்துகின்றேன்”.
வீரகேசரி மூர்த்தி உரையாற்றிய போது,
“ஆரம்ப காலத்தில் எழுத்தாற்றலும், பத்திரிகைத் துறை அனு பவமும் மிக்கவர்களால் செந்தாமரை, ஈழநாடு ஆகிய பத்திரிகைள் வெளியிடப்பட்டு வந்தன. அவற்றி னை வாசகர்கள் வாரா வாரம் ஒவ்வொரு டொலருக்கு வாங்கிப் படித்தார்கள். ஆனால் எழுத்தாற்றலோ, பத்திரிகைத் துறை அனுபவமோ இல்லாத சிலர் கூடி இலவசமாக ஒரு பத்திரிகையினை வெளியிட்டர்கள்.
அதனால் ஏனைய பத்திரிகைகளும் இலவசமாக விநியோகிக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள் ளாகின. அதனால் அவற்றின் தரமும் குறைவடைந்து இன்று விளம்பரப் பத்திரிகைகளாக வெளிவந்து கொண்டிருக்கிறன். எனவே தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்து பார்க்காதே என்பதற்கொப்ப “தளிர்” சஞ்சிகையினையும் இலவசமாக வழங்காது ஆக்க குறைந்தது ஒரு டொலருக்காவது விற்பனை செய்ய வேண்டும்”எனக் கேட்டுக் கொண்டார். திரு.வின் மகாலிங்கம், திரு.ராஜபாலன், சிந்தனை பூக்கள் பத்மநாதன், கதிர் ஒளி பத்திரிகை ஆசிரியர் திரு.போள் ராஜபாண்டியன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.
“தளிர்” முதற் பிரதியை வீடு விற்பனை முகவரான திரு.சங்கர் மாணிக்கம் நிதி வழங்கி நூலாசிரியரி டம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இறுதியில் மலர் ஆசிரியர் திரு.சிவமோகன் நன்றியுரை வழங்கினார். அழகு ராணி யதுரி சிவானந்தன், பரத நாட்டிய தாரகை செல்வி பிரியங்கா பரமநாதன், “அர்ஜன் பியூட்டி பாளர்” நிறுவன திருமதி சசிகலா ஆகியோர் மேடையில் வைத்து கௌரவிக்கப்பட்டனர்.Canadian South Asia Sports Recreational Organization of the deaf அமைப்பைச் சேர்ந்த செவிப் புலன் குன்றிய தமிழ் இளைஞர்களும் விழா நிகழ்ச்சிகளை நடாத்த உதவி செய்தனர்.
(தமிழ் சி.என்.என்.னுக்காக மூர்த்தி)
கனேடிய காலாண்டு தமிழ் சஞ்சிகையான தளிர் வெளியீட்டின் முழுமையான படங்களையும் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்..

Post a Comment