நீர்கொழும்பிலுள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து ஒன்றரை கோடி ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகளை பேலியகொட விசேட புலனாய்வுப் பிரிவு பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நீர்கொழும்பு நகரிலுள்ள முன்னணி நிதி நிறுவனமொன்றினுள் ஆயுதங்களுடன் புகுந்த சிலர் அதன் உரிமையாள் மற்றும் ஊழியர்களை அச்சுறுத்தி பணத்தைக் கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment