முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை இராசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை இரசாயன பகுப்பாய்விற்கு உட்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தின் பதில் நீதவான் தங்கராசா பரஞ்சோதி, மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பில் விசாரணை நடத்தியதுடன், இரசாயன பகுப்பாய்விற்கும் உத்தரவிட்டார்.
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியார் காணியொன்றை உழவு இயந்திரத்தை பயன்படுத்தி துப்புரவு செய்தபோது 09 எலும்புக்கூடுகள் நேற்று முன்தினம் இரவு கண்டெடுக்கப்பட்டன.
இந்த எலும்புக்கூடுகள் பாயில் சுற்றப்பட்ட நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment