GuidePedia

0
மேல், தென் மாகாணங்களுக்கான தேர்தல்   எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 216 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பாக 5 முறைப்பாடுகளும் இதுவரையில் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ள தேர்தல்கள்  கண்காணிப்பு அமைப்பானது நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கம் (கபே) கொழும்பு  மாவட்டத்திலே அதிகளவான தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.
தேர்தல் கண்காணிப்பு தொடர்பாக நேற்று முன்தினம் கபே அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, 
 
அரச வளங்களை முறையற்ற வகையில் கையாளுதல், அரச ஊழியர்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தல், இடமாற்றுதல் தொடர்பாக 77 முறைப்பாடுகளும்,  முறையற்ற தேர்தல் பிரசாரங்கள் மேற்கொண்டமை தொடர்பாக 117 முறைப்பாடுகளும் 17 பிற முறைப்பாடுகள் உள்ளடங்களாக தேர்தல்கள் சட்டங்களை மீறியமை தொடர்பில் 211 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.  சொத்துகளுக்கு நட்டங்களை ஏற்படுத்தியமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், மிரட்டல், அச்சுறுத்தல் தொடர்பில் 3 முறைப்பாடுகள் உள்ளடங்களாக 5 தேர்தல் வன்முறைச்,சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தில்  அதிகப்படியாக 67 தேர்தல்கள் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் கிடைத்துள்ள அதேவேளை, தென் மாகாணத்தின் மாத்தறை மாவட்டத்தில் அதிகப்படியான 19 தேர்தல்கள் சட்டங்களை மீறிய முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதேவேளை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலேயே அதிகப்படியான 3 தேர்தல் வன் முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள்  பதிவாகியுள்ளன என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top