GuidePedia

0
எம்.,ஸட். ஷாஜஹான்
 
பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள வீடுகளுக்குள் திட்டமிட்ட முறையில் நுழைந்து துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல கொள்ளளைக் கோஸ்டியைச் சேர்ந்த பெண் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகே தெரிவித்தார்.
 
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து துப்பாக்கிகள், வாகனங்கள், நகைகள்; உட்பட 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.   
குருநாகல், மினுவாங்கொடை, வலல்லவிட்ட, வெல்லவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளவர்களாவர். குறித்த சந்தேக நபர்களை நேற்று இரவு மினுவாங்கொட, ஆண்டி அம்பலம ஆகிய பிரதேசங்களில் வைத்து கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்களில்  ஒருவர் பெண் என்பதுடன் குறித்த பெண் சந்தேக நபர்களில் ஒருவரின் ஆசை நாயகி எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
சந்தேக நபர்கள் குருநாகல், மாவ, பலல்ல. வியாங்கொடை, மினுவாங்கொடை, மஹர ஆகிய பிரதேசங்களில்  உள்ள வீடுகளில் நீண்டகாலமாக துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தல் விடுத்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
 
கைது செய்யப்பட்டுள்ள பெண் வீடுகளுக்கு சென்று முகவரி ஒன்றை விசாரிப்பது போல் நடிக்கும் போது , மற்றைய சந்தேக நபர்கள் திடீரென துப்பாக்கியை காண்பித்து  வீட்டில் உள்ளோருக்கு அச்சுறுத்தல் விடுத்து, வீட்டில் உள்ள தங்க நகை, பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை கொள்ளையிட்டு வந்துள்ளனர்.
 
பிரதான சந்தேக நபரிடமிருந்து போலி அடையாள அட்டைகள் இரண்டு கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், மோட்டார் சைக்கிள்கள் இரண்டு , கார் ஒன்று, ரிவோல்வர் ஒன்று, சொட்கன்; ஒன்று, சன்னம் ஒன்று, தங்கச் சங்கிலி  ஒன்று, வளையல்கள் நான்கு, மோதிரம் ஒன்று , கைகடிகாரம் ஒன்று என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 
 
கைப்பற்றப்பட்டுள்ள கார் வாடகைக்கு பெறப்பட்டதாகும். அந்த காரையும் , மோட்டார் சைக்கிள்களையும் கொள்ளைச் சம்பவத்திற்கு பயன்படுத்தியுள்ளனர்.
 
10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்,  இந்த கொள்ளைக் கோஸ்டியுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட வேண்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 
 
நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த லியனகேயின் ஆலோசனையின் போரில் நீர்கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பாளர் பிரசன்ன பிரியதர்ஸனவின்  வழிகாட்டலின் கீழ் பொலிஸ் சார்ஜன்களான விஜேசேகர, எம்.எல்.எம். ரஹ{ப், செனவிரத்ன, மற்றும் கான்ஸ்டபிள்களான சம்பத் ஜயசூரிய, நிரோசன் பெரேரா ஆகியோரைக் கொண்ட குழுவினர் சந்தேக நபர்களை கைது செய்துள்ளதோடு வாகனங்களையும் ஆயுதங்களையும், தங்க நகைகளையும் கைப்பற்றியுள்ளனர்.

Post a Comment

 
Top