GuidePedia

0
யாழ்ப்பாணம் மாதகல் – சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தில், சிவதொண்டர் அமைப்பால் அமைக்கப்பட்ட வட மாகாணத்திலேயே உயரமான சிவபெருமானின் 21 அடி உயர தியான திருச்சொரூபத்திற்கான திருக்குடமுழுக்கு இனறு ஞாயிற்றுக்கிழமை செந்தமிழ் திருமறையில் நடைபெறறது.
அன்றைய தினம் செந்தமிழில் சிவதீட்சை வழங்கும் வைபவமும் நடைபெறும். அத்துடன், சிவ நற்பணி மன்றங்களின் அறப்பணிச் செயற்திட்டங்களில் இணைந்துகொள்ள விரும்புவோர் சிவதொண்டர்களாகவும், சிவ மங்கையர்களாகவும் உறுதிப்பிரமாணம் எடுத்து இணைந்துகொள்ளும் வைபவமும் இடம்பெறும்.
இதேவேளை, சம்புநாத ஈஸ்வரர் ஆலயத்தைச் சூழவுள்ள ஆலயங்களிலிருந்து சிவனடியார்களால் ஓம் நமசிவாய மந்திர பாராயணத்துடன் பூரண கும்பங்கள் கொண்டுவரப்பட்டு சம்புநாத ஈஸ்வரருக்கு அபிசேகம் செய்யப்பட்டது.
இலங்கையிலேயே இந்த ஆலயத்தில் தான் முதன் முதலாக செந்தமிழ் திருமறையில் திருக்குடமுழுக்கு இடம்பெறவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
snapshot_001
snapshot_002
snapshot_003
snapshot_005
snapshot_006
snapshot_007
snapshot_008

Post a Comment

 
Top