GuidePedia

0
பேராதனை பல்கலைக்கழகத்தில் விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த 5 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
பேராதனை பல்கலைக்கழக மாணவர் மகா சங்க உபதலைவர் மற்றும் பொறியியல் பீட மாணவர்கள் நால்வர் ஆகியோருக்கே இவ்வாறு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
பேராதனை பல்கலைக்கழக பொறியியல் பீட விரிவுரையாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்தல், புதிய மாணவர்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட விரும்பத்தகாத செயற்பாடுகளை புரிந்ததன் காரணமாக சங்க உப தலைவருக்கு 5 வார கால வகுப்புத் தடையும் மாணவர்களுக்கு தலா 4 வார கால வகுப்புத் விதிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

 
Top