தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மனநிலை
பாதிக்கப்பட்டவர் போன்றே செயற்பட்டுவருகின்றார். அவருக்கு
தற்போது வயதாகிவிட்டமையினால் இவ்வாறு செயற்படுகின்றார் என்று
கருதுகின்றேன் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க
தெரிவித்தார்.
கச்சதீவை கோருவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு எவ்விதமான
உரிமையும் இல்லை. கச்சதீவானது இந்திய மத்திய அரசாங்கத்துக்கும்
இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம் இலங்கைக்கு
உரித்தாக்கப்பட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்
நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து
வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் கூறியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா மனநிலை பாதிக்கப்பட்டவர் போன்று
செயற்படுகின்றார். தற்போது வயதாகிவிட்டது என்பதால் இந்த நிலையா
என்று புரியவில்லை. பிரபாகரனுக்கு எதிராக ஒரு காலத்தில் கடுமையாக
செயற்பட்டதுமட்டுமன்றி புலிகளுக்கு எதிராக செயற்பட்டவர் இந்த
ஜெயலலிதா ஆவார். அவர் இவ்வாறு திடீரென மறுபக்கம் மாறி
பேசிக்கொண்டிருப்பதால்தான் மனநிலை பாதிக்கப்பட்டிருக்குமோஇ என்ற
சந்தேகம் எழுகின்றது.
இது இவ்வாறு இருக்க கச்சதீவை கோருவதற்கு தமிழக அரசாங்கத்துக்கு
எவ்விதமான உரிமையும் இல்லை. கச்சதீவானது இந்திய மத்திய
அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் பிரகாரம்
இலங்கைக்கு உரித்தாக்கப்பட்டது. அதனை தமிழகம் கோர முடியாது.

Post a Comment