மாடறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய பௌத்த அமைப்பினால் முன்னெடுத்துவரும் எதிர்ப்புப் போராட்டம் மூன்றாவது நாளாக நேற்றும் மேற்கொள்ளப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தினால் அனுப்பப்பட்ட கடிதத்தினை கிழித்தெரிந்ததுடன் மோதலிலும் சிங்கள ராவய அமைப்பின் தேரர்கள் ஈடுபட்டனர்.
நாட்டில் மாடறுப்பதனை உடனடியாக நிறுத்தாவிடின் எமது சத்தியாக்கிரக போராட்டம் தொடர்வதோடு உயிர்த்தியாகத்தை செய்யவும் தயார் எனவும் சிங்கள ராவய அமைப்பு எச்சரித்துள்ளது.
மாடறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிங்கள ராவய பௌத்த அமைப்பினால் மேற்கொள்ளப்பட்டுவரும் எதிர்ப்புப் போராட்டமானது நேற்றும் தொடர்ந்ததுடன் பெரும் மோதலிலும் ஈடுபட்டனர். கடந்த ஒரு வார காலமாக மாடறுப்பதற்கு எதிராக பாதயாத்திரையினை மேற்கொண்டு வந்த சிங்கள ராவய பௌத்த அமைப்பினர் தமது போராட்டத்திற்கான உடனடித் தீர்வினையும் ஜனாதிபதியுடன் கோரியிருந்தனர்.
இந்நிலையில் சிங்கள ராவய அமைப்பின் கோரிக்கைக்கேற்ப ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கடிதம் வழங்கப்பட்ட போதிலும், அக்கடிதத்தில் தமது கோரிக்கைக்கான தீர்வ உள்ளடக்கப்படவில்லை என கடிதத்தினை கிழித்தெரிந்ததுடன், பொலிஸாருடனான வாக்கு வாதத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே இனந்தெரியா நபர்கள் சிலா பௌத்த தேரர்களுடன் முரண்படவும் இரு தரப்பினரிடையேயும் கெரும் மோதல் உண்டானது.
இதனையடுத்து தமது கோரிக்கைகள் உடனடியாக நிரைவேற்றப்படும் வரையில் நாம் தொடர்ந்தும் சத்தியாக்கிரக போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இன்று ஜனாதிபதி செயலகத்தில் இருந்து சரியான தீர்வ வராவிடின் தாம் தீக்குளிக்கப் போவதாகவும் சிங்கள ராவய பௌத்த அமைப்பினர் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பில் சிங்கள ராவய பௌத்த அமைப்பின் தலைவர் ஹக்மீமன தயாரத்தன தேரர் தெரிவிக்கையில்,
அரசாங்கம் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் எம்மை ஏமாற்றிவிட்டது. எமது கோரிக்கைகள் ஜனாதிபதிக்கு நகைச்சுவையாக மாறிவிட்டது. நாம் குறிப்பிடுவது இந்த நாட்டின் பாரம்பரியத்தினை காப்பாற்றும் விடயம். இன்று நாட்டில் முஸ்லிம் தீவிரவாதிகள் பௌத்த கொள்கையினையும், நாட்டின் தொண்மையினையும் அளிக்கும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அரசாங்கம் அவை தொடர்பில் கவனம் செலுத்தாதுள்ளது. நாட்டில் தமிழர் தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படும்போது சர்வதேச அளவில் குறள் கொடுக்கின்றனர். முஸ்லிம்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகள் குறள் கொடுக்கின்றது. ஆனால் சிங்களவர்களுக்கு ஒன்றென்றால் யாரும் வருவதில்லை. அரசாங்கம் கூட எமக்காக குறள் கொடுக்க முன்வரவில்லை.
இந்நாட்டு பௌத்தர்களை யார் காப்பாற்றுவது. எமக்காக யார் குறள் கொடுப்பது. எமத இனம் இன்று எவராலும் மதிக்கப்படாத இனமாக மாறிவிட்டது. சிங்கள அரசாங்கம் கூட சிங்களவர்களை கவனத்திற் கொள்ளவில்லை. இன்று நாம் விடுத்துள்ள கோரிக்கைக்கு காதல் கடிதம் எழுதுவதுபோல் அரசாங்கம் பதில் தெரிவித்துள்ளது. அரசாங்கம் பொருப்பில்லாது செயற்படுமாயின் உடனடியாக ஆட்சியினை விட்டுவிட்டு பௌத்தத்தினை நேசிக்கும் நபருக்கு ஆட்சியமைக்க அனுமதிக்க வேண்டும்.
இன்று எமக்கான தீர்வு கிடைக்கப்பட வேண்டும். அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் கால அவகாசம் வழங்கப்பட முடியாது. எமக்கு இன்று ஒரு தீர்வு இல்லையேல் நாம் எமது உயிர்களை பௌத்தத்திற்காக தியகம் செய்வோம். இவ்விடத்திலே தீக்குளிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

Post a Comment