நாகொட மற்றும் வெலிகம பகுதிகளில் நீரில் மூழ்கி 15 வயதான 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.
நாகொட கிங் கங்கைக்கு நேற்று மாலை குளிக்க சென்றபோது மாணவி ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார்.
அவர் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
தனது சகோதரர்களுடன் குளிக்கச் சென்றபோதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, மிரிஸ்ஸ களுவெல்ல கடலில் நீராட சென்ற சிறுமியொருவரும் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
மிரிஸ்ஸ சபுமல் பகுதியை சேர்ந்த சிறுமியே கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்

Post a Comment