முல்லைத்தீவு புதுகுடியிருப்பு பொலிஸ் பிரிவிலுள்ள காணியொன்றிலிருந்து எலும்புக்கூடுகள் சில மீட்கப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பு மூங்கிலாறு வடக்கு பகுதியிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணியொன்றில் இருந்து இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இதுதொடர்பான தகவல் கிடைத்ததை அடுத்து புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்றிருப்பதுடன், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Post a Comment