இறைச்சிக்காக கல் ஆமைகளைப் பிடித்துக்
கொண்டிருந்த ஐவரை மாரவில பொலிஸார் நேற்று மாலை கைது செய்துள்ளனர். கைது
செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிடித்த 14 கல் ஆமைகளையும் அவர்களிடமிருந்து
கைப்பற்றியுள்ளதாகவும் மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று முன்தினம் மாலை மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹத்தினிய ஹொரகெலே
பிரதேசத்தில் உள்ள சதுப்பு நிலப்பகுதியிலேயே சந்தேக நபர்கள் இவ்வாறு
ஆமைகளைப் பிடித்துக் கொண்டிருந்த போது பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்
போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை அவர்களால்
பிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட கல் ஆமைகளுடன் மாரவில நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்த மாரவில பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மாரவில பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் அமித ரஞ்சித் தலைமையிலான
குழுவினர் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

Post a Comment