GuidePedia

0
கொழும்பு நகரத்திற்குள் மாத்திரம் சுமார் 3 ஆயிரம் கட்டாக்காலி நாய்கள் இருப்பதாகவும் இவைகளைப் பிடிப்பதற்காக போதியளவு சேவையாளர்கள் இல்லாத காரணத்தினாலும் பராமரிப்பதற்குத் தேவையான நிலையங்கள் இல்லாத காரணத்தினாலும் பல்வேறு சிக்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை கால்நடை வள அபிவிருத்தி திணைக்களம் சுட்டிக் காட்டியுள்ளது. 
இவ்வாறான கட்டாக்காலி நாய்களைப் பிடித்து பராமரிப்பதற்காக கொழும்புக்கு வெளியே அநுராதபுரம் பிரதேசத்தில் பராமரிப்புக்குத் தேவையான இடமொன்றை ஒதுக்கிக் கொள்ளும் பிரேரணையொன்றும் இத்திணைக்களத்தினால் கொழும்பு மாநகர சபையிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. 
 
தற்பொழுது மாநகர சபையின் கால் நடை வள அபிவிருத்தி திணைக்களத்தில் கட்டாக்காலி நாய்களைப் பிடிக்கும் பணிகளுக்காக ஆறு பணியாளர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒரேயொரு பணியாளர் மாத்திரமே இருப்பதாகவும் திணைக்கள அதிகாரியொருவர் குறிப்பிட்டார். 
 

Post a Comment

 
Top