நிவித்திகலை உடகரவிட்ட பகுதியில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த நபரொருவர் மண்ணில் புதையுண்டு பரிதாபகரமான முறையில் பலியாகிய சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
மரணமடைந்தவர் கரவிட்ட தெனியகடே பகுதியில் வசித்து வந்த மொஹமட் தாஹிர் மொஹமட் ஹிலிர் (44) எனப்படுபவரே ஆவார்.
ஆழமான குழியில் கிளை குகை ஒன்றில் வேலை செய்து கொண்டிருக்கும் போது மேற் சுவர் பகுதியில் மண் கொட்ட முடியாதவாறு இணைக்கப்பட்டிருந்த மரக்கம்பொன்று உடைந்து வீழ்ந்து குழியில் மணல் நிரம்பியதால் இம்மரணம் இடம்பெற்றுள்ளது.
நுரையீரல் பகுதியில் மணல் இறுகியதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மரணம் சம்பவித்திருப்பதாக நிவித்திகலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜானக்க விஜேரத்ன தெரிவித்தார்.

Post a Comment