GuidePedia

0
யாழ்.வடமராட்சி இன்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் விடுவிக்ககோரி இந்தியாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது.
 
 இந்தியாவில் கைது செய்யப்பட்ட யாழ்.வடமராட்சி இன்பசிட்டியைச் சேர்ந்த ஐந்து மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்து யாழ். இந்திய துணைத்தூதரக்திடம் மீனவர் சங்கப் பிரதிநிதிகளினால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.
 
யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சமாசங்களின் சம்மேளனத்தின் தலைவர் அ.எமிலியாம்பிள்ளை மற்றும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களினால் இந்த மகஜர் நேற்று நண்பகல் யாழ்.இந்தியத் துணைத்தூதரக அதிகாரி ஆர்.ராஜநாயகத்திடம் கையளித்தனர். 
 
கடந்த 9 ஆம் திகதி இந்நியாவின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களை விடுவிக்ககோரியே மேற்படி மகஜர் கையளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top