GuidePedia

0
பத்து வயதுடைய பாடசாலை மாணவியைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டிருப்பதாக மாரவில பொலிஸார் தெரிவித்தனர். 
மாரவில கட்டுநேரிய எனும் பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் 5 ஆம் வகுப்பில் கல்வி பயிலும் லுணுவில சிகம்பல பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமியே இவ்வாறு துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டவராவார். 
 
நேற்று இச்சிறுமி பாடசாலை முடிவடைந்து வீடு  செல்வதற்காக கட்டுநேரிய தெமடபிட்டிய பஸ் தரிப்பிடத்தில் நின்றிருந்த வேளை சைக்கிள் ஒன்றில் அவ்விடத்திற்கு வந்துள்ள சந்தேக நபர் சிறுமியின் பெற்றோரைத் தனக்குத் தெரியும் எனக்கூறி வீட்டில் கொண்டு சென்று விடுவதாக சிறுமியை அழைத்துள்ளார். 
 
பின்னர் சிறுமி அவருடன் சைக்கிளில் சென்றுள்ளார். இவ்வாறு சென்ற சிறுமியை கட்டுநேரி தேவாலயத்திற்கு பின்புறமுள்ள பாழடைந்த பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியுள்ளார். சந்தேக நபரிடம் சிக்கிய சிறுமி தன்னை காத்துக்கொள்ள சப்தமிட்டுக் கத்தியுள்ளதுடன் அங்கிருந்து  தப்பி ஓடி அயலிலுள்ளவர்களிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளார். இதற்குள் சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 
 
இதன்  பின்னர்  இச்சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெறோர்  அறிந்து கொண்டு அது தொடர்பில் மாரவில பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின்  ஆலோசனைக்கமைய சிறுமி  மாரவில  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்திய பரிசோதனையில்  சிறுமி  கடுமையான  வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Post a Comment

 
Top