சிங்கள பெளத்தர்களின்
உரிமைகளுக்காக மட்டுமல்ல தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும்
பொது பலசேனா முன்னின்று செயற்படுகின்றது என தெரிவிக்கும் அதன் பொது
செயலாளர் கலாநிதி அத்தே ஞானசார தேரர், வெளிநாடுகளிடம் நாம் பணம்
வாங்குவதை அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவினால் நிரூபிக்க முடியுமா
என்றும் சவால் விடுத்தார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்தார்.
எந்தவொரு நாட்டிடமிருந்தோ அமைப்புக்களிடமிருந்தோ அல்லது
அரசாங்கத்திடமிருந்தோ நாம் பணம் வாங்கவில்லை. மாறாக எமது
பக்தர்கள் வழங்கும் நிதியுதவிகள் மூலமே சிங்கள பௌத்த மக்களின்
உரிமைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றோம்.
அது மட்டுமல்லாது கிழக்கில் தமிழ் மக்கள் தமது தீர்த்து வைக்கப்படாத
பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொள்ள எம்மை நாடி
வருகின்றனர்.
இவர்களுக்கான அமைச்சர்கள் எவரும் எப்போதாவது உதவி
செய்திருக்கின்றார்களா? சிங்கள பௌத்தர்களுக்கு எதிரான அந்நிய
சக்திகளின் சதிகளை வெளிப்படுத்திய எந்தவொரு அமைச்சரையும்
உங்களால் அடையாளம் காட்ட முடியுமா? அவ்வாறானவர்கள் இன்று பொதுபல
சேனா வெளிநாடுகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு வெளிநாட்டு
தலையீட்டுக்கு துணை போகின்றது என குற்றஞ்சாட்டுகின்றனர்.
முடிந்தால் அமைச்சர் வாசு நாம் பணம் வாங்கியதை நிரூபித்துக் காட்ட முடியுமா என சவால் விடுக்கின்றேன்.
இந்த குற்றச்சாட்டை நிராகரிக்கின்றேன். இடதுசாரிகள் எனக்கூறிக்
கொள்பவர்கள்தான் நாட்டை பிரிவினைவாதத்திற்கு கொண்டு செல்லும்
நிகழ்ச்சி நிரலை ஆதரிப்பதோடு சர்வதேச நாடுகளுக்கு எமது நாட்டுக்கு
எதிரான விதத்தில் மறைமுகமாக சாட்சியங்களை வழங்குகின்றன.
சிங்களமாகட்டும் தமிழாகட்டும் முஸ்லி மாகட்டும் இதனூடான அடிப்படை வாதத் தையே நாம் எதிர்க்கின்றோம்.

Post a Comment