இ.தொ.கா. என்பது பலமுள்ள கோட்டை. அக்கோட்டையின் தலைவரும் பிரதியமைச்சருமான முத்து சிவலிங்கத்தினதும், பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானினதும் சக்தியை மேல் மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்து எமது மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என இ.தொ.கா வேட்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் விடிவெள்ளி இ.தொ.கா. ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிருலப்பனையில் இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே வேட்பாளர் கே. சிவலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கொழும்பில் பெரும்பாலும் எமது மக்கள் தோட்டங்களில் வாழ்கின்றனர். மிகநெருக்கமான வீடுகள், அடிப்படை வசதிகள் குறைபாடு, சுகாதாரச் சீர்கேடுகளுடன் வாழ்கின்ற இம் மக்களோடு மக்களாக வாழும் நான் இதனை நன்கு அறிவேன்.
இப்பிரச்சினைகளுக்கு தமிழ்த் தலைவர்கள் எனக் கூறிக்கொள்பவர்களால் நிரந்தரமான தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படவில்லை.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இ.தொ.கா. மேல் மாகாண சபைத் தேர்தலில் கறமிறங்கியுள்ளது.
சொன்னதைச் செய்யும்; செய்வதை சொல்லும் சக்திமிக்க தலைவர்களான முத்து சிவலிங்கம், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசீர்வாதத்துடன் நானும் களமிறங்கியுள்ளேன்.
மக்களின் தேவைகள் என்னவென்பதை மக்களோடு மக்களாக வாழ்ந்து வரும் எமக்கு தெரியும். எனவே, என்னை மாகாண சபை உறுப்பினராகத் தெரிவுசெய்யுங்கள்.
எனது மக்களுக்கான சேவைகளை நிச்சயம் மேற்கொள்வேன். எமது தலைவர்களின் உதவிகளால் மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியும்.
எனவே, வாக்குகளை சிதறடிக்காது சிந்தித்து வாக்களித்து மக்கள் தமது தேவை களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் வேட்பாளர் சிவலிங்கம் தெரிவி த்துள்ளார்.

Post a Comment