மியன்மாரில் எதிர்வரும் மார்ச் மாதம்
இடம்பெறவுள்ள உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை சந்திக்கவுள்ளதாக
தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக இந்திய வெளியுறவு செயலர் சுஜாதாசிங் தெரிவிக்கையில்,
மியன்மாரில் எதிர்வரும் மார்ச் 4- ஆம் திகதி பிம்ஸ்டெக் அமைப்பின் உச்சிமாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவைஇ பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசவுள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கையில் நடந்த கொமல்வெல்த் மாநாட்டில்
பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில்
ஜனாதிபதி மகிந்தவை மன்மோகன் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment