கண்டி, கண்ணொருவ பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 22 வயதுடைய இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி சம்பவத்தில் மரணமான இளைஞனின் சடலம் இன்று காலை கடற் படையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை மாலை நண்பர்களுடன் மகாவலி கங்கை யில் நீராடச் சென்ற மேற்படி இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போனதாக உடனிருந்த நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர் கடுகண்ணாவையைச் சேர்ந்த ரொஷான் குமார அமுனுபுர என்ற 22 வயதுடைய இளைஞராவார்.
இவரது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கட்டுகஸ்தோட்டை பொலஸார் தெரிவிக்கின்றனர்.

Post a Comment