GuidePedia

0
மிருக வதைக்கு எதிராக சிஹல ராவய அமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 
 
கண்டி ஸ்ரீ தலாத மாளிகையிலிருந்து கொழும்பில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை வரையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 9ம் திகதி முதல் 16ம் திகதி வரையில் சிஹல ராவய அமைப்பு மிருக வதைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடவுள்ளது.
 
இலங்கையின் எந்தப் பாகத்திலும் போராட்டங்களை நடத்தக் கூடாது என நீதிமன்றம் சிஹல ராவய அமைப்பிற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top