GuidePedia

0
யாழ். மாவட்­டத்தில் இன்று முதல் எதிர்­வரும் முதலாம் திக­தி­வரை கால்­பந்­தாட்டக் கொண்­டாட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.
 
பருத்­தித்­துறை கால்­பந்­தாட்ட லீக்­கினால் நடத்­தப்­படும் இறுதி ஆட்­டத்தில் டயமண்ட் விளை­யாட்டுக் கழ­கமும் நவ­ஜீவன் விளை­யாட்டுக் கழ­கமும் மோதவுள்ளன. இந்த ஆட்டம் கொலின்ஸ் விளை­யாட்டு மைதா­னத்தில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.
 
டயமண்ட் கழ­கத்­திற்கு சி. நளி­னி­காந்­தனும் நவ­ஜீவன் கழ­கத்­திற்கு ரீ. நிர்­ஷனும் அணித் தலை­வர்­க­ளாக விளை­யா­ட­வுள்­ளனர். இந்த லீக் போட்­டியில் 42 கழ­கங்கள் பங்­கு­பற்­றி­யி­ருந்­தன.
 
வலி­காமம் கால்­பந்­தாட்ட லீக் இறுதி ஆட்­டத்தில் யங் ஹென் றிஸ் அணியும் சண்­டி­லிப்பாய் கல்­வளை விநா­யகர் அணியும் இள­வாலை புனித ஹென்­றி­ய­ரசர் மைதா­னத்தில் நாளை­ம­று­தினம் மின்­னொ­ளி யில் இரவு 8 மணிக்கு எதிர்த்­தா­ட­வுள்­ளன.
இப்­போட்­டிக்கு முன்­ன­தாக கண்­காட்­சிப்­போட்­டி­யாக மாதகல் சென்.யோசப் மகா­வித்­தி­யா­லய மகளிர் அணியும் இள­வாலை கன்­னி­யர்­மடம் மகா­வித்­தி­யா­லய மகளிர் அணியும் மோத­வுள்­ளன.
 
இதனைத் தொடர்ந்து மார்ச் முதலாம் திகதி யாழ்ப்­பாணம் கால்­பந்­தாட்ட லீக்­கிற்­கான இறுதி ஆட்­டத்தில் பாடும்மீன் அணியும் சென். அன்­தனிஸ் அணியும் பிற்­பகல் 3 மணிக்கு விளை­யா­ட­வுள்­ளன.
 
இதனைத் தொடர்ந்து டய லொக் லீக் சம்­பியன் விமா­னப்­படை அணிக்கும் கார்கில்ஸ் புட் சிட்டி எவ். ஏ. சம்­பியன் இரா­ணுவ அணிக்கும் இடை­யி­லான சம்­பி­யன்­களின் சம்­பியன் இறுதி ஆட்டம் நடை­பெ­ற­வுள்­ளது.
 
இந்த இரண்டு போட்­டி­களும் யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கில் நடை­பெ­ற­வுள்­ளன.
லீக்­கு­க­ளினால் நடத்­தப்­படும் இறுதிப் போட்­டிகள் யாவும் இலங்கை கால்­பந்­தாட்ட சம்­மே­ளனத் தலைவர் கிண்­ணத்­திற்­காக நடத்­தப்­ப­டு­கின்­றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

 
Top