அனுமதிப்பத்திரம் இன்றி இரண்டு மாடுகளை இறைச்சிக்காக வெட்டியதாகக் கூறப்படும் மூன்று சந்தேக நபர்களை அளவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அக்குறணை, புளுகொஹொதென்ன பிரதேசத்திலுள்ள உற்சவ மற்றும் வரவேற்பு மண்டபம் ஒன்றின் சமயலறையில் இம்மாடுகள் அறுக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
அறுக்கப்பட்ட இரண்டு மாடுகளின் இறைச்சி, மாட்டின் தலைகள் மற்றும் இதர பாகங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கண்டி நீதிமன்றில் ஆஜர்செய்ய அளவத்துகொடைப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Post a Comment