GuidePedia

0
வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசீதரனின் ஜெனீவா பயணத்தை அங்குள்ள சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கைக்கு எதிராக பயன்படுத்திக்கொள்வது நிச்சயமாகுமென எச்சரிக்கை விடுக்கும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமரானால் இலங்கைக்கு எதிரான அழுத்தம் அதிகரிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 
இது தொடர்பாக டாக்டர் வசந்த பண்டார மேலும் தெரிவிக்கையில்,
 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசீதரன் முதலமைச்சரின் அனுமதியுடன் 3 மாத விடுமுறையில் வெளிநாடு செல்ல முடியும். 
 
அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. இதனை தடுக்க அரசாங்கத்தால் முடியாது. ஏனென்றால் அவர் பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினர் அல்ல. மக்களால் தேர்தலில் ஜனநாயக ரீதியில் மாகாண சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 
எனவே இதனை தடுக்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு கிடையாது. ஆனால் அனந்தி சசிதரனுக்கு உள்ள உரிமையை ஜெனிவாவில் அவர் பிழையாக பயன்படுத்துவார். 
 
அவரால் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது. ஆனால் ஜெனீவாவில் இயங்கும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் அனந்தியை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தி அவரிடமிருந்து இலங்கைக்கு எதிரான கருத்துக்களையும் தகவல்களையும் பெற்றுக்கொண்டு அதனை அறிக்கையாக தயாரித்து ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். 
 
இது நாட்டுக்கு விபரீதமாகவே அமையும். தனது உரிமையை நாட்டுக்கு எதிராக அனந்தி பிரயோகிப்பது நிச்சயமாகும். 

Post a Comment

 
Top