பேஸ்புக்கில் வெளியான புகைப்படம் ஒன்றின் காரணமாக மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குருநாகல் பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
குறித்த மாணவி ஆண் ஒருவருடன் நிற்பது போன்று பேஸ்புக்கில் வெளியான புகைப்படம் ஒன்றின் தொடர்பாக குறித்த மாணவியின் பெற்றோர் பாடசாலைக்கு வரவழைக்கப்பட்டு பாடசாலை அதிபரினால் விளக்கம் கோரப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து மனவேதனையடைந்த சிறுமி வீட்டில் வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment