GuidePedia

0
தந்தைக்கும் மகனுக்குமிடையே ஏற்பட்ட தகராறு ஒன்றினையடுத்து மகன் பொல்லால் தாக்கியதில் தந்தை பலியான சம்பவம் ஒன்று பதுளை மெதபத்தனை என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது.
பதுளை - மெதபத்தனையைச் சேர்ந்த எச்.எம். அபேசிங்க என்ற 55 வயது நிரம்பிய நபரே இவ்வாறு பலியானவராவார்.
 
மகன் கைது செய்யப்பட்டுள்ளான். தாக்குதலுக்கு பயன் படுத்தப்பட்ட இரத்தம் தோய்ந்த நிலையிலான பொல்லும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது.
 
 குடும்பப்பிரச்சினையொன்றின் காரணமாக தந்தைக்கும் மகனுக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இத்தகராறு முற்றவே ஆத்திரமடைந்த மகன் பொல் ஒன்றினை எடுத்து தகப்பனை பலமுறை தாக்கியுள்ளான். இதனையடுத்து தாக்கப்பட்ட நபர் பதுளை  அரசினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியிலே அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். பதுளை பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்தும் தீவிர புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

 
Top