கைப்பற்றிய நூதனசாலை பொருட்களை சி.ஐ.டி பாதுகாப்பில் வைக்க பணிப்பு
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் தீர்ப்பு வரும்வரையில் நூதனசாலை திருட்டுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுப வர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களை குற்றப்புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பிலேயே வைக்குமாறு நீதிமன்றம் நேற்று பணித்துள்ளது.
களவாடப்பட்;ட பொருட்கள் என்ற வகையில் நீதவான் நீதிமன்றில் அவற்றை ஒப்படைக்குமாறு நீதவான் கிஹான் பலபிட்டிய முன்னர் பணித்திருந்தார்.
ஆயினும், தடயப்பொருட்களை புலனாய்வு பிரிவினரே வைத்திருப்பதற்கு நீதவான் ரஷ்மி சிங்கப்புலி முன்னர் அனுமதித்திருந்தார் என்பது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் சுட்டிக்காட்டியதையடுத்து கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை குற்றப்புலனாய்வு பிரிவினரே வைத்திருப்பதற்கு நீதவான் பலபிட்டிய நேற்று அனுமதியளித்தார்.

Post a Comment