GuidePedia

0
 (ஆதவன்) 
 
கால்கள் நிலத்தில் முட்டுண்ட படி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த வவுனியாவைச்சேர்ந்த இளைஞன் கொலை செய்யப்பட்டபின்பே தூக்கிலிடப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.
 
யாழ்.நகரின் நாவலர் வீதியிலுள்ள கட்டிடத்திலிருந்து யாழ்ப்பாணத்தில் புகையிரதப் பாதை அமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர் ஒருவர் மர்மமான முறையில் சடலமாக இன்று காலை பொலிஸார் மீட்கப்பட்டிருந்தார். 
 
வவுனியாவைச் சேர்ந்த கணேஸ் ருக்ஷன்(வயது 26) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த இளைஞர்  கொலை செய்யப்பட்டபின்பு தூக்கிலிடப்பட்டிருக்கலாம் என   பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். 
 
இதேவேளை நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டு அந்தகட்டத்திலிருந்த  பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

Post a Comment

 
Top