GuidePedia

0
மதுபோதையில் வாகனம் செலுத்திய பிரதேச சபை உறுப்பினர் கைது

தலாவ பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவிக்கின்றது.

பிரதேச சபை உறுப்பினரான ஆர்.எம்.ஏ.கே. ஜயசிங்க என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

மதுபோதையில் காரை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் தம்புத்தேகம பொலிஸாரால் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண ​தெரிவித்தார்.

மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ், பிரதேச சபை உறுப்பினர் மீது வழக்குத் தொடரவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Post a Comment

 
Top